மனையடி சாஸ்திரம்
வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ் வீட்டின் உரிமையாளர்கள் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள்.
6, 8, 10, 11, 16, 17, 20, 21, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 52, 56, 60, 63, 64, 66, 68, 70, 71, 72, 73, 74, 77, 79, 80, 84, 85, 87, 88, 89, 91, 92, 95, 97, 99, 100, 101, 102, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117, 119.இந்த அளவுகள் நன்மையையும், சுபிட்சத்தையும் தருவன ஆகும். மற்ற அளவுகள் தீய பலன்களை தரும். வீடுகளுக்கு தாழ்வாரம் 5 அடி 6 அங்குலத்திற்கு மேல் தான் அமைய வேண்டும். வீடுகளில் அமைக்கும் கூடம், அறைக்களுக்கு 10, 16, 22, 29 அடி அகலமும் அதற்கு சமமான நீளமும் வைக்க வேண்டும்.
இப்போது அறை, ரேழி, கூடம் ஆகியவற்றிற்கான அளவு முறைகளின் பற்பலன்களை விரிவாகக் காண்போம்.
6 அடி
நன்மை பலன்
இறைவனின் அருள் சேரும். குல தெய்வ வழிபாடு சிற்ப்பாகும். பொன், பொருள், யோகம் உண்டாகும்.
7 அடி
நன்மை பலன்
வறுமை தாண்டவமாடும். நோய் வரும். வரவுக்கு மேல் செலவு வரும். கடன் மிகும்.
8 அடி
நன்மை பலன்
செல்வம் கொழிக்கும். தெய்வ பார்வைகிட்டும். இன்பம் வந்து சேரும். பதவி கிடைக்கும். பிறறை அதிகாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
9 அடி
நன்மை பலன்
தோல்விகள் தொடர்கதை ஆகும். துன்பம் வரும். துணைவரோடு பிணக்கு ஏற்படும்.
10 அடி
நன்மை பலன்
அறுசுவை உணவு உண்ணலாம். ஆடம்பரமான ஆடை அணியலாம். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.
மனையடி சாஸ்திரம் பற்றி சில தகவல்கள்
மனையடி சாஸ்திரம்(Manaiyadi Sasthiram) – இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களை வித்தாக கொண்டது. ஒவ்வொரு உயிர் பொருள்கள், உயிரற்ற பொருள்கள் எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது. ஒருவருக்கு தான் வசிக்கும் வீட்டில் அமைதி நிலவி செல்வம் ஆரோக்கியம் பெற நினைப்பவர் கண்டிப்பாக மனையடி வாஸ்து சாஸ்திரம் விதிகளை கையாள வேண்டும்.
மனையடி சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும்பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக காலி இடம்(free space) விட்டு வீடு கட்ட வேண்டும்.
வீடு கட்டுவதற்கு வாஸ்து மூலம் வீட்டில் வசிப்பவர்களுக்கு பிரபஞ்சத்திலிருந்து நேர்மறையான ஆற்றல் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன. பஞ்சபூதங்களின் சமநிலை தவறும் போது நம் வீட்டில் பிரச்னைகளும் சிக்கல்களும் ஏற்படும். வாஸ்து சாஸ்திரப்படி எந்த அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.
வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர்
வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர் தென்மேற்கு 1inch ஆவது உயர்ந்த இருக்க வேண்டும். அதை விட சற்று குறைவாக தென் கிழக்கு முனை அதை விட குறைவாக வட மேற்கு முனை சுவர் அதை விட குறைவாக வட கிழக்கு சுவர் முனை இருக்க வேண்டும். தென்மேற்கு > தென் கிழக்கு > வட மேற்கு > வட கிழக்கு
பூஜை அறை அமைக்க மனையடி சாஸ்திரம்
பூஜை அறை அமைக்க மனையடி சாஸ்திரம் – வீட்டில் வட கிழக்கு பகுதியில் இருப்பது நல்லது. சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி பார்க்கும் படி வைக்க வேண்டும். இந்த திசையில் சேமித்து வைக்கக் கூடிய அறை இருக்கலாம்.
இந்த பகுதியில் சமையல் அறை, கழிப்பறை, இருப்பது நல்லதன்று. சாமி புகைப்படங்களை வடக்கு பார்த்தும் வைக்கலாம். இறந்தவர்கள் புகைப்படத்தினை தெற்கு பார்த்து மாட்ட வேண்டும்.
மனையடி சாஸ்திரம் பொது தகவல்கள்
மனையடி சாஸ்திரம் பற்றிய பொது தகவல்கள் – எந்தெந்த திசைகளில் எவை இருந்தால் நல்லது என்று பொதுவான தகவலாக பார்ப்போம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வீடு வாங்குபவரின் 4 பாவத்தை பொறுத்தே துல்லியமாக சொல்ல முடியும்.
கிழக்கு – குடிநீர் தொட்டி
தென்கிழக்கு – சமையலறை
தெற்கு – படிக்கும் அறை
தென் மேற்கு , மேற்கு, தெற்கு – படுக்கையறை
வடமேற்கு – கழிவறை
வடக்கு – குபேரனுடைய திசை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
வடகிழக்கு – குடிநீர் ஆதாரம் அமைக்கலாம்
வட கிழக்கு, கிழக்கு, மேற்கு – பூஜை அறை
ஆஸ்ட்ரோ பதிவுகள்